பூமியைப் போன்ற மேலும் 7 கோள்கள் கண்டுபிடிப்பு
பூமியையொத்த 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர், பூமியைப் போன்ற கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், ஒரே தடவையில் 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க வானியல் ஆராய்ச்சி நிறுவனமான (NASA) நிறுவனம், குறித்த 7 கோள்களும், நட்சத்திரம் ஒன்றை மையமாகக் கொண்டு சமாந்தரமாக வலம்வருவதாக அறிவித்துள்ளது.
இது, பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழலாம் எனும் புதிய எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மேலும், குறித்த மூன்று கோள்களில் ஒன்று, பூமியை முற்றிலும் ஒத்ததாக காணப்படுவதாக நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments: