Header Ads

காதலர் தின மாயையில் தாயக கலாசார சீரழிவுகள்


World Valentine Day
இன்று உலக வலன்ரைன்ஸ் டே:
 உலக காதலர் தினம் இன்றாகும். புனிதர் வலன் ரைன்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரியாரின் தூய்மை யான சிந்தனையின் அவரின் ஞாபகார்த்தமாகவே இந்தத் தின த்தை உலகில் வாழும் கத்தோலிக்க மக்கள் நினைவு கூர்ந்தனர்.
மூன்றாம் நூற்றாண்டில் உரோமா புரியில் பங்குத் தந்தையாக வாழ்ந்து மக்களுக்கு ஊழியம் செய்து புனிதரானவர் ‘வலன்ரைன்ஸ்’ அவர் கள். அந்த நூற்றாண்டில் நடந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களால் படைக்குச் சேர்க்கப்பட்டு குடும்பங்களைப் பிரிந்த இளம் கணவன்மார்கள், உறவுகளை பிரிந்து போர்முனைகளில் இருந்த இளைஞர்கள், குடும்பங்களோடும் உறவுகளோடும் பாசப் பிணைப் புகளை ஏற்படுத்துவதற்காக அன்று நினைவு கூரப்பட்டதே இன் றைய காதலர் தினமாகும். இவை நமக்கு வரலாறு சொல்லும் பாட ங்கள். ஆண்டுதோறும் பெப்ரவரி 14ம் திகதி புனிதர் வலன் ரைன்ஸின் இன் பெயராலேயே காதலர் தினம் கொண்டாடப்படுகி றது.
உறவுகளுக்கும் உள்ளங்களுக்கும் உயிரூட்டி மனித உயிர்கள் மகிழ்ச் சியோடு பூவுலகில் வாழவேண்டுமென்ற புனித நோக்கத்தோடு உருவாக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவு கூரப்படும் மிகவும் உன்னதமான தினம் இந்த காதலர் தினமாகும்.
இந்தத் தினத்தைக் கொண்டாட, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பே உலகம் தயாராகி விட்டது. மேற்குலக நாடுகளின் வாழ்வியல் கலா சாரத்துடன், இந்தத் தினத்தின் கொண்டாட்டங்கள் உலகம் முழுவ தும் வியாபித்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் இந்த உன்னதமான தினத்தை இலங்கை உட்பட உலகம் முழுவதும் கொண்டாடும் நாகரிக போக் கைப் பார்க்கின்ற போது நமக்குள் பல்வேறு கேள்விகள் எழுகின் றன.
மேற்குலக நாடுகளின் ‘கலாசாரமும் வாழ்வியலும் நாகரீகமும் வித் தியாசமானவை. நாகரீகம், நவீனத்துவம் என்ற போர்வையில் அவ ர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் ஆதிகால வாழ்க்கைக்கு ஒப் பானவையாக இருக்கின்றன. உணர்வுகளைக் கூட பக்குவமாக மறைத்து வைத்திருக்க தெரியாத மனோபாவம் கொண்டவர்களே இந்த மேற்குலக மக்கள். இதனாலேயே ‘காதலர் தினம்’ என்பது ஆணும் பெண்ணும் வெளிப்படையாகவே அன்பைப் பரிமாறும் தினம் என்ற தவறான அர்த்தத்தை உலகுக்குப் போதித்திருக்கிறார் கள்.
நம்மைப் போன்ற ஆசிய நாடுகளுக்கு தனியான கலாசாரம், நாகரீகம் இருக்கிறது. திருமணமுறையிலும், காதல் கொள்வதிலும் நமக்கெ ன்று தனியான ஒழுக்கங்களும் நாகரீகமும் இருக்கிறது. இதனைத் தான் இப்போதும் நாம் பின்பற்றுகிறோம். என்றாலும் ‘காதலர் தினம்’ (வலன்ரைன்ஸ்) என்று வரும் பொழுது நாமும் நமது நாடும் இவைகளையெல்லாம் தொலைத்து விட்டோமா? என எண்ணத் தோன்றுகிறது.
அண்மைக் காலமாக இலங்கையிலும் இதன் தாக்கம் வெகுவாகப் பரவி வருகின்றதென்பதை நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது. கொழும்பு, கண்டி, நுவரெலியா போன்ற நகரங்களிலெல்லாம் இந் தத் தினத்தையொட்டிய மோசமான வைபவங்கள் ஏற்பாடு செய்ய ப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த சில ஆண்டு களிலும் இதேநிலைதான் இருந்தது. நட்சத்திர ஹோட்டல்களிலும், பொது இடங்களிலும் கூடும் இளம் வயதினர் அரைகுறை ஆடை களில் புரியும் சல்லாபம் இந்த நாட்டின் பாரம்பரியங்களுக்கும் கலா சாரத்துக்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இந்தத் தினத்திலே இரவு நேரத்தில் நடக்கும் களியாட்ட விழா க்கள் மிகவும் அருவருப்பானதாகவும் குடும்ப உறவை தூரப்படுத் துவதாகவுமே இருக்கின்றன. நாலாபுறமும் மழையாகப் பெய்வது போல் தண்ணீர் விசிறப்பட காதல் ஜோடிகள் அரைகுறை மெல் லிய ஆடையில் டூயட் ஆடுகிறார்கள். இது நிர்வாணக் கோலத்தி ற்கு ஒப்பானதாக இருக்கிறது. இந்த ஆட்டமும், பாட்டமும், கும் மாளமும் நம் நாட்டுக்குத் தேவையா? உறவுகளுக்கு ஒளியேற்ற வேண்டிய இன்றைய தினத்தில் இருளை பரப்புகின்ற சீரழிவான கலாசாரம் இது என்பதை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
‘வலன்ரைன்ஸ்’ தினத்தையொட்டி வைபவங்களை ஏற்பாடு செய்யும் பணம் படைத்தவர்களும் நாகரீக மோகத்தில் இருப்பவர்களும் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். தங்களது மனைவிகள் அல்லது தங்களது மகள்மார் அரைகுறை ஆடையில் மேடை யில் அம்பலத்தில் நின்று ஆடினால் எப்படி இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அப்போது அதன் யதார்த்தம் புரியும்.
காதலர் தினத்தை முதன்மைப்படுத்தி இளம் வயதினரை ஈர்த்தெடுப்ப தில் வெகுஜன ஊடகங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. குறிப்பாக, இலத்திரனியல் ஊடகங்கள் இந்த விடயத்தில் மிகவும் எடுப்புடன் செயற்படுவதை நாம் காண முடிகிறது. இளவயதினரின் கவனத் தைத் திருப்புவதில் இந்த ஊடகங்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றன.
வர்த்தக நிறுவனங்களும் இளம் வயதினரின் பலவீனங்களைப் பயன் படுத்திக் கொள்ளக்கூடிய தந்திரத்தை கையாள்கின்றன. இதற்காக, அவர்கள் வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆடை கள், அலங்காரப் பொருட்கள், சொக்கலேட் வகைகள் ஏன், காதலு க்கு அடையாளமாகத் திகழும் றோஜா மலர்களுக்குக் கூட விளம் பரம் செய்து கொள்கிறார்கள். இன்றைய தினத்தில் பரிசுப் பொருட் களை பரிமாறிக் கொள்ள வேண்டுமென்பது நமது கலாசாரமும் இல்லை: பாரம்பரியங்களும் இல்லை. எங்கிருந்தோ வந்து இடை நடுவில் நம்மோடு ஓட்டிக் கொண்ட அநாகரீங்கள் இவை என் பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இத்தகைய, மேற்குலக நாகரீகத்தை நமது நாட்டுக்குள் வலிந்து திணிப் பதிலே வர்த்தக நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. காதலர் தினத்தை கலா சாரமாக்கி தங்களது வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வதே இந்நிறு வனங்களின் தந்திரமாகும்.
ஆகவே விளம்பர வசீகரத்திலும், நாகரீக மோகத்திலும் இளம் வயதி னர் (ஆண், பெண் இருபாலாரும்) சிக்கிக் கொள்வதைத் தவிர்த் துக்கொள்ள வேண்டும். இன்றைய காதலர் தினம் மிகவும் புனித மானது. காதல் என்றதும் பாலியல் உணர்வுகளோடு சிந்திப்பது இப்போதெல்லாம் உலகமயமாகிவிட்டது. அன்பு, இரக்கம், கருணை, காருண்யம் இவையெல்லாம் காதல் என்பதை நமது இளம் சந்ததியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
தூய்மையான அன்பையே புனிதர் வலன்ரைன்ஸ் வலியுறுத்தினார். வரண்டு போய்க் கிடக்கும் உள்ளங்களுக்கும், உறவுகளுக்கும் புத் துயிரூட்டி, மனித குலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ப தையே அவர் விரும்பினார். காதலர் தின களியாட்டம், களேபரத் தில் இருக்கும் இளம் பராயத்தினரே இது உங்களின் கவனத் துக்கு. தூய்மையான அன்பே என்றும் நிலைத்திருக்கும்!


No comments:

Powered by Blogger.