Header Ads

பறக்கும் பறவைகளை பார்ப்பதன் பயன்..!


பறக்கும் பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வுடனான ஆர்வம் பிறக்குமென பிரிட்டனின் எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின் மூலம் பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு, மன அழுத்தம், மனப்பதற்றம் மற்றும் சோர்வுகள் நீங்குவதோடு, ஆர்வமிகு புத்துணர்வு தன்மை ஒன்று உருவாகுமென தெரியவந்துள்ளது. மேலும் வீட்டைச் சுற்றி மரங்கள் இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்குமெனவும் கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆய்வு பற்றி கருத்து பகிர்ந்துள்ள, எக்ஸீடர் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் கோக்ஸ் குறிப்பிடுகையில் பறவைகளுடனும்,  இயற்கையை வளங்களுடனான வாழ்க்கைதான் உண்மையான மகிழ்ச்சியை தரக்கூடியது என்பதை கண்டறிவதற்காகவே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


No comments:

Powered by Blogger.