Header Ads

மழைக்கான காலநிலை வலுவடையும்



எதிர்வரும் சில நாட்களுக்கு, நாட்டில் தற்போது நிலவும் மழைக்கான காலநிலை மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக, மார்ச் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று (26), நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான காலநிலை நிலவும் என எதிரவுகூறப்பட்டுள்ளது. வட மாகாணம் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (26) பிற்பகல் 2.00 மணியின் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், சில பகுதிகளில், (குறிப்பாக கிழக்கு, ஊவா) 75 mm (7.5cm) வரையான கடும் மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடியுடன் கூடிய மழை பொழியும் இடங்களில், காற்றின் வேகம் தற்காலிகமாக வலுவடையும் எனவும், மின்னல் பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Powered by Blogger.