Header Ads

கொழும்பு ஆனந்தா, நாலந்தா மாணவர்களின் மோதல் : சிசிடிவி வெளியானது : 10 பேர் பிணையில் விடுதலை

கொழும்பின் பிரதான பாடசாலைகளான ஆனந்தா கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரி, மாணவர்களுக்கிடையில் (15) பிற்பகல் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த மாணவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனந்த கல்லூரியின் இருவரும், நாலந்த கல்லூரியின் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகிள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களில்  10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மாணவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
10 மாணவர்களை (15) மாலை மாலிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு மாணவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரும் மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் 15 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொழும்பு டி.எஸ் சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Powered by Blogger.