Header Ads

காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரியும் பலி


களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது நேற்று(27) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் உத்தியோகத்தரான காரைதீவை சேர்ந்த சிவானந்தம் தர்மீகன் ( வயது 24) என்பவர் பலியாகியுள்ளார். அவரோடு மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் விஜயரத்ன என்பவரும் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.காரைதீவு 1 விபுலானந்த வீதியைச்சேர்ந்த தர்மீகன் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் பி.சிவானந்தம் முகாமைத்துவ உதவியாளர் திருமதி சிவயோகம் சிவானந்தம் தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.இவர் அண்மையிலேயே சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.