Header Ads

இத்தாலியில் பிறந்த மார்க்கோனி

இத்தாலியில் பிறந்த மார்க்கோனி எனும் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி முதலாவது உலக மகாயுத்த காலத்தில் தகவல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட யுகத்திலேயே அது குறித்து இலங்கையிலும் ஆர்வம் மேலோங்க ஆரம்பித்துவிட்டது! அதன் காரணமாக 1922 ஜூன் மாதத்தில் Lanka Wireless Club என்ற பேரில் ஆரம்பமான வானொலிக் கழகம் பின்னர் 1923 ஜூலை மாதத்தில் Lanka Amateur Radio Club என்றும் தொடர்ந்து "இலங்கை தென்னிந்திய வானொலிக் கழகம் "என்றும் பேர் மாறியது ! 1924 ஆம் ஆண்டு இலங்கையில் ஒலிபரப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பமான பிறகு அது தனது மாதவெளியீட்டில் இலங்கை வானொலி நிகழ்ச்சிவிபரங்களையும் சேர்த்து வந்தது! அச்சந்தர்ப்பத்தில்தான் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் குறித்து நேயர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து வானொலியின்பால் அவர்களை ஈர்க்க RADIO TIMES முதல் இதழ் 1926. 11. 29ம் திகதியன்று வெளியாகியுள்ளது! அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்ட அதன் வருட சந்தாவாக தபால் கட்டணத்துக்கென 1/50 அறவிடப்பட்டதாம்!



அந்தரீதியில் 1949ம் ஆண்டு நவம்பர் 01 முதல் 15ஆம் திகதிவரைக்கான இதழ் 245 முன்பக்க நிழல்படம் இது! 90 % ஆங்கில நிகழ்ச்சிகளும், 10 % சிங்கள தமிழ் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுவந்த அந்தக் காலகட்டத்தில் நாடகப் போட்டி, நேர்முக அஞ்சல் நிகழ்ச்சிகள் தமிழில் இடம் பெற்றுள்ளதை இந்த இதழ் உறுதிப்படுத்துகிறது!
பழையவற்றை ஆராயும்போது மூழ்கி எடுத்த முத்து இது!

No comments:

Powered by Blogger.