Header Ads

கௌரவ பா.உ. மன்சூரின் அயராத முயற்சியினால், சம்மாந்துறையில் 415 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நிர்மாணிக்கப்படவுள்ளது.



01. உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இந்நிறுவனத்தை நிர்மாணிக்க நிதி ஒதுக்கியுள்ளது.
02. இதற்கென 3 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
03. இங்கு 15 கற்கை நெறிகள் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் நடைபெறவுள்ளன.
04. வியாபார நிருவாகத்தில் தேசிய உயர் டிப்ளோமா, சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் தேசிய உயர் டிப்ளோமா, ஆங்கிலத்தில் தேசிய உயர் டிப்ளோமா, உணவு தொழில்நுட்பவியலில் தேசிய உயர் டிப்ளோமா, முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா, தொழில்நுட்பவியலில் (விவசாயம்) தேசிய உயர் டிப்ளோமா, நுகர்வோர் விஞ்ஞானங்கள், மற்றும் உற்பத்தி தொழில்நுட்பவியலில் உயர் தேசிய டிப்ளோமா போன்ற கற்கைநெறிகளை மாணவர்கள் இங்கே பயிலலாம்.
உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்ததின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு அதன் நிர்மாணப்பணிகள் சம்பந்தமாக கலந்துரையாடலிலும் ஈபட்டிருந்தனர்.



No comments:

Powered by Blogger.