Header Ads

தென் சூடானில் பஞ்சம் தாக்கியதாக பிரகடனம்

உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் பேர்வரை பட்டினியில் வாடுவதாக அந்நாட்டு அரசு மற்றும் ஐ.நா கூறியுள்ளது. உள்நாட்டுப் போரும் பொருளாதார வீழ்ச்சியும் இந்த பஞ்சத்துக்கு காரணமாக கூறப்படுகின்றது. யெமன், சோமாலியா மற்றும் வடகிழக்கு நைஜீரியாவில் நிலவரம் பஞ்ச நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும், தென் சூடானிலேயே பஞ்சம் முதல் தடவையாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
தென் சூடான் மக்கள் தொகையின் 40 வீதத்துக்கும் அதிகமான மக்கள் அதாவது 49 லட்சம் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நாவின் சிறார் அமைப்பான யுனிசெப் உட்பட உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. குறைந்த பட்சம் 20 வீதமான மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை முகம்கொடுப்பது, 30 வீதத்திற்கு அதிகமானோருக்கு மோசமான ஊட்டச்சத்து மற்றும் பத்தாயிரம் பேருக்கு ஒரு நாளைக்கு இருவராவது இறக்கும் நிலை பஞ்சம் தக்கியதை பிரகடனம் செய்யும் காரணிகளாகும்.

No comments:

Powered by Blogger.