Header Ads

WORLD RADIO DAY (FEB 13) உலக வானொலி தினம் (பெப்ரவரி 13)




உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அதாவது இன்று கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளை ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. ஆயினும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.நா. 36 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3 ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பின்னர் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாக வானொலி தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஒரே நேரத்தில் தகவல்களை அதிகளவான மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய வெகுஜன ஊடகமாக வானொலி திகழ்கின்றது. இலங்கையின் இலத்திரனியல் தொடர்பாடல் துறைசார் வரலாற்றில் மிகப் புராதன ஊடகமாக காணப்படுவது வானொலி ஊடகமே ஆகும்
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.

“கம்பியற்ற தகவல்தொடர்பு முறை” மற்றும் “மார்க்கோனி விதி” ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.

இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர் மற்றும் 1897 ல்“மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்”, “வானொலி” மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.

தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ்( radius) என்ற இலத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை , டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.

பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி (1874-1937) வானொலியை கண்டறிந்தார். இன்று உலக முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.
www.aazathfm.com

No comments:

Powered by Blogger.