Header Ads

பாலர் பாடசாலை கழிவறை நெரிசலில் பாலகர்கள் இருவர் பலி!

சீனாவின் பாலர் பாடசாலை ஒன்றில், கழிவறையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருபது பேர் காயமடைந்தனர். எனினும், கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததே மாணவர்கள் உயிரிழக்கக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய சீனாவின் புயாங் நகர பாலர் பாடசாலை ஒன்றில், காலை நேர இடைவேளையின்போது, மாணவர்கள் சிலர் கழிவறைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே, மேலும் பல மாணவர்கள் வந்து நெருக்கத் தொடங்கியதால், உள்ளே இருந்த இரண்டு சிறார்கள் கீழே விழுந்து உயிரிழந்ததாகக் சொல்லப்படுகிறது. காயமடைந்த சிறார்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முடுக்கி விட்டிருப்பதாக புயோங் நகரசபை கூறினாலும், இவ்விபத்து எதனால் இடம்பெற்றது என்பது குறித்து எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. சீனாவில் இதற்கு முன்னரும், 2014ஆம் ஆண்டு பாடசாலை ஒன்றில் படிக்கட்டில் ஏற்பட்ட நெருக்கடியால் ஆறு குழந்தைகள் உயிரிழந்ததோடு 25 மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.