சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
2017/03/02ம் திகதி சம்மாந்துறைப் பிரதேச செயலக சமூர்த்தி பிரிவினால் சிப்தொற புலமைப் பரிசில் நேர்முகப் பரீட்சை மூலமாக தெரிவாகிய 68 பேருக்கு காசோலை வழங்கும் வைபவம் பிரதேச செயலாளர் AA.Mansoor அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ MIM.மன்சூர் சேர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர் காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி விசேட உரை நிகழ்த்தியதுடன் மாணவர்களுக்கு காசோலையும் வழங்கி வைத்தார். ஒரு மாணவர் க.பொ.த(உ.தரத்தில்) கல்வி கற்கும் 2 வருடங்களுக்கு இப் பணம் வழங்கப் படும். ஒரு மாதத்திற்கு ரூபா1500 வீதம் 24 மாதங்களுக்கும் 36000/-வழங்கப்படும். 68 மாணவர்களுக்கும் 36000/- வீதம் 2448000/- வினை சமூர்த்தி தலைமைக் காரியாலயத்தினால் வழங்கப்படவுள்ளது. இதில் இன்று 68 மாணவர்களுக்கும் 1020000/-ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: