Header Ads

பாலர் பாடசாலை மாணவர்களால் வீதி விபத்துக்களைத் தடுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்



பாலர் பாடசாலை மாணவர்களால், வீதி விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விருதோடை சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கும் அல்ஹுதா பாலர் பாடசாலை மாணவர்களாலேயே குறித்த விழிப்புணர் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதன்போது, பாலர் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சுலோகங்களையும் சுமந்தவாறு பிரதான வீதியில் ஊர்வலமாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினர். 
 
“சாரதிகளே குழந்தைகளைப் பாதுகாப்பது உங்கள் கடமை”, “வீதி ஒழுங்கு விதிகளை மதிப்போம்”, “பாதுகாப்பான பயணமே எமது குறிக்கோள், "3 - 4 பேரை ஏற்றிச் செல்லாதீர்”, “வாகனத்தை மெதுவாகச் செலுத்துவோம்”, “ சிறுவர்களுக்கு வாகனத்தைச் செலுத்த அனுமதிக்காதீர்கள்”, “பெற்றோர்களே உங்கள் கவனயீனம் ஊரவர்களின் உயிரைக் குடிக்கும்”, “பாதசாரிகளே உங்களது விதிமுறைகளை மீறாதீர்கள்” போன்ற பல்வேறு சுலோகங்களை இம்மாணவர்கள் தூக்கியவாறு இந்த ஊர்வளத்தில் கலந்து கொண்டிருந்தனர்.




No comments:

Powered by Blogger.