Header Ads

சம்மாந்துறை மண்ணின் அபிவிருத்தி வரலாற்றில் அபிவிருத்தி இலக்கின் இன்னுமோர் அடைவுத் தருணம்





திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ MIM.மன்சூர் அவர்களின் சிந்தனையில் உதித்த எமதூர் மண்ணின் அபிவிருத்தி வரலாற்றில் அபிவிருத்தி இலக்கின் இன்னுமோர் அடைவுத் தருணமாக 

நாளை 10.04.2017 திங்கட் கிழமை காலை 9.00 மணி முதல் பல அபிவிருத்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
தார் வீதியாக்கப்பட்ட அம்பாரை 10ம் வீதியைத் திறந்து வைத்தல், 
அம்பாரை 12ஏ வீதியைத் திறந்து வைத்தல்,
ஹிஜ்ரா 2ம்வீதி, மதீனா உம்மா வீதி, முகைடீன் மாவத்தை குறுக்கு வீதிகளை திறந்து வைத்தல்,
மல் 6ம் வீதியைத் திறந்து வைத்தல்
தார் வீதியாக்கப்பட்ட மல் 15ம் வீதிக்கான அடிக்கல் நடல்,
அல்-அர்ஷத் வடக்கு வீதிக்கான அடிக்கல் நடல்
சபூர் பள்ளிவாயலின் அருகாமையிலுள்ள பாலத்தை திறந்து வைத்தல்,
அல்ஹம்ரா வீதியைத் திறந்து வைத்தல், மேலும்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சென்னல் கிராமம்-01இல் கட்டி முடிக்கப்பட்ட  சம்மாந்துறை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கான வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டிடத்தை திறந்து வைத்தல்.

11.04.2017 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல்
இரண்டு தசாப்த காலமாக நிரந்தர கட்டிட வசதியின்றி இயங்கி வந்த 
சம்மாந்துறை SLIATE நிறுவனத்திற்கான 5 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடல்,
நில அளவைத் தினைக்கள சம்மாந்துறை பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்தல்.


போன்ற இந்நிகழ்வுகள் அனைத்தும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ MIM.மன்சூர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. 

பிரதம அதிதியாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் றவூப் ஹக்கீம் அவர்களும்
கௌரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,
சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம்,
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான
கௌரவ ஐ.எல்.எம்.மாஹிர், கௌரவ கே.எம்.ஏ.றஸ்ஸாக், கௌரவ ஏ.எல்.எம்.தவம், கௌரவ சட்டத்தரணி  ஆரிப் சம்சுடீன்

விசேட அதிதிகளாக SLIATE பணிப்பாளர் நாயகம் Dr.டபள்யு.ஹிலாறி யீ. சில்வா
கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய தினைக்கள ஆணையாளர் திருமதி. சு. சிறிதர், அம்பாரை சிரேஷ்ட நில அளவைத்திணைக்கள அத்தியட்சகர் எம்.ரி.எம்.றபீக், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து அம்பாரை பிரதான வீதியில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Powered by Blogger.