Header Ads

3 1/2 கோடி ரூபா செலவில் உடையாண்ட கட்டுப்பாலம்



3 கோடி 50 இலட்சம் ரூபாய் செலவில் சம்மாந்துறை மோறாவில்ஆற்றுக்கு குறுக்காக உடையாண்ட கட்டுக்கு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 3 கோடி 50 இலட்சம் ரூபாய் செலவில் சம்மாந்துறை மோறாவில் ஆற்றுக்கு குறுக்காக உடையாண்ட கட்டுக்கு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயற்சியின் பலனாக இப்பிரதேச விவசாயிகளின் மிக நீண்டகாலத் தேவையாக இருந்த இப்பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ். றிப்னாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பாலத்திற்கான அடிக்கல்லினை நட்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, மோறாவில் பிரிவு திட்ட முகாமைத்துவ குழுவின் தலைவரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான கே.எம்.முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர்சட்டத்தரணி எம்.எம்.ஜௌபீர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாலமானது 20மீற்றர் நீளமும், 6மீற்றர் அகலமும் கொண்டது. மல்வத்தை, மல்லிகைத்தீவு, நெயினாகாடு கிராமத்திலிருந்து அம்பாறை, வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் மற்றும் இறக்காமம் போன்ற கிராமங்களுக்கு விவசாயிகளும். பொதுமக்களும் மிக இலகுவாக இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளலாம். மேலும் மோறாவில் முதலாம், இரண்டாம் பிரிவுகளில் விவசாயத்தினை மேற்கொள்ளும் 3000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் நன்மையடைவுள்ளனர்.


No comments:

Powered by Blogger.