Header Ads

திறனொளி நடாத்திய கலை இலக்கிய பயிற்சிப் பட்டறை



திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் இணைய வானொலி ஆஸாத் எப்.எம் இன் ஓராண்டு நிறைவையொட்டி சம்மாந்துறை வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்படும் திறனொளியின் திறமைக்கான தேர்வு விருது வழங்கும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான கலை இலக்கியம் தொடர்பான பயிற்சி பட்டறையும் அறிமுக நிகழ்வும் அண்மையில் கமுஃசதுஃதாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாத் அவர்களின் நெறிப்படுத்தலுடன், அமைப்பின் நிருவாக உறுப்பினரும் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.சி.எம்.காலித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆஸாத் எப்.எம் இணைய வானொலியின் ஸ்தாபகரும் அமைப்பின் போஷகருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பதிதிகளாக கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்கள் சம்மேளன தலைவர் ஏ.ஜே.காமில் இம்டாட், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண அறிவிப்பாளர் எஸ்.எம்.எம்.ஜவாத், நேத்ரா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அறிவிப்பாளர் ஏ.பி.நிஸ்ரின் மற்றும் வளவாளர்களாக துறைசார்ந்த மூத்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், கல்விமான்கள்  என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நடாத்தியிருந்தனர்.


கலந்து கொண்ட மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் மார்ச் 30ம் திகதியும் ஏப்ரல் 7ம்> 8ம் திகதிகளிலும் நடைபெறுமென அமைப்பின் செயலாளர் கூறினார்.
















No comments:

Powered by Blogger.