Header Ads

பிரதேச கலாசார விழாவும், மலர் வெளியீடும்-2018




சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபை ஏற்பாடு செய்து நடாத்திய கலாசார பிரதேச சாஹித்திய கலாசார பெருவிழா கடந்த 29.03.2018ந் திகதி அப்துல் மஜீட் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் விசேட அதிதிகளாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு கே.விமலநாதன், நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் கலை கலாசார நிகழ்ச்சிகள், பட்டறை மலர் வெளியீடு, பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு, மாறன் யூ செயினின் 'இரத்த நரம்புகள்' நூல் வெளியீடு, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.















No comments:

Powered by Blogger.