Header Ads

பிரதீபா பிரபா சான்றிதழ் வழங்கி வைப்பு


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் அம்பாரை மாவட்ட செயலகம் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நடாத்திய நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.ஸி.நவ்சாட் அவர்களுக்கு வானொலி அறிவிப்புத் துறைக்காக பிரதீபா பிரபா சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் சிரேஷ்ட அறிவிப்பாளர் சான்றிதழை வழங்கி வைத்தார். 



மேலும், ஓவியத் துறைக்காக எம்.எம்.முஹம்மட் மாஜித் அவர்களுக்கும், கட்டுரைத் துறைக்காக ஏ.எல்.எம்.மர்சூக் அவர்களுக்கும், நாடகத் துறைக்காக எம்.ஐ.றமீஸ் நிஷா அவர்களுக்கும், சிற்பத் துறைக்காக யூ.எல்.றைசா ஹஸ்மத், என்.எம்.சர்பான் அவர்களும் பெற்றுக்கொண்டனர். இவர்கள் திறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.





No comments:

Powered by Blogger.