Header Ads

ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு


சம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணிப்புலவர் புலவர் மருதூர் ஏ மஜீத் இலக்கியங்களில் கவிதைகள் - ஓர் ஆய்வு நூல் வெளியீட்டு விழா 2019.05.26 திகதி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் கவிஞர் அதிபர் ஏ.சீ.எ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்-ஹாஜ்.எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து சிறப்பித்தார்கள்.

நூல் நயவுரையினை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வும், நினைவுரைகளை முஸ்லிம்களின் பள்ளு இலக்கியத்தின் தந்தை மௌலா ஹாஜியார் அவர்களின் மகன் ஓய்வு பெற்ற அதிபர் கலைஞர் எம்.ரீ.ஏ.சலாம் அவர்களும், முஸ்லிம்களின் பள்ளு இலக்கியத்தின் தந்தை மருதூர் ஐ.அலியார் அவர்களின் அவர்களின் மூத்த மகன் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களும் நிகழ்த்தியிருந்தார்கள். விஷேட உரையினை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களும் ஏற்புரையினை நூலாசிரியை ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா நிகழ்த்தினார்கள். அறிவிப்பாளர் ஏ.ஸீ.நௌசாட் நிகழ்வினை தொகுத்தளித்தார்.























No comments:

Powered by Blogger.