Header Ads

திறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு




திறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில் நடைபெற்றது

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கலாசார உத்தியோகத்தர்கள் றஸ்மி மூஸா, ஜனாப் பிர்தௌஸ், எம்.வை.நௌஷானா மற்றும் மூத்த இலக்கியவாதி கலாபூஷணம் மாறன் யூ ஸெயின், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ரீ.ஏ.சலாம், நெல் சந்தைப்படுத்தல் சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.அலிகான், சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்கள் சம்மேளன தலைவர் தேசமான்ய ஏ.ஜே.காமில் இம்டாட், மன்றத்தின் கௌரவ பிரதிநிதி ஏ.எல்.நளீம் உட்பட திறனொளி கலை மன்ற செயற்பாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக சிறந்தமுறையில் கலை இலக்கிய சமூக செயற்பாடுகளை மன்றத்தினூடாக வழங்கி செயற்பட்ட மன்ற உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.








































No comments:

Powered by Blogger.