Header Ads

திறனொளி ஏற்பாட்டில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம்




 

திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பானது சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நடாத்திய சிறப்பு நிகழ்வுகள் கடந்த ஒக்டோபர் 01ம் திகதி சம்மாந்துறையில் நடைபெற்றது.


கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஷா அவர்களின் மேற்பார்வையுடன் திறனொளி கலை மன்ற ஸ்தாபகத் தலைவரும் அறிவிப்பாளரும் சுவதம் கலைஞருமான ஏ.சி.நௌசாட் மற்றும் மன்ற பொருளாளர் அல்-ஹாபிழ் பீ.எம்.பர்ஹானுடீன் ஆகியோரின் நெறிப்படுத்தலுடன் ஆலோசனை சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எச்.எம்.கிபாயத்துல்லா அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், கலாசார பிரிவு உத்தியோகத்தர்களான திருமதி அஸ்கர் பெனாசிர், திருமதி ஏ.பி. பாத்திமா றிபானா, நிருவாக கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.தாசிம், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் எஸ்.சம்சுதீன், கலாபூஷணம் கலைவேள் மாறன் யூ ஸெயின், சம்மாந்துறை வரி இறுப்பாளர் சங்க தலைவர் தேசகீர்த்தி ஏ.எல்.எம்.யாஸீன் (ஜே.பி), உட்பட மன்றத்தின் உறுப்பினர்கள் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.